பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் JACSAFA அமைப்பும் நேரு யுவகேந்திரா அமைப்பும் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி 21:12.2004 அன்று பிற்பகல் 2.10 மணியளவில் இறைவணக்கத்துடன் தொடங்கியது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி.சேசுராணி, கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் R.சாந்தாமேரி, ஜோஸிற்றா கல்லூரி இல்லத்தலைமை அட்சகோதரி முனைவர் R. பாத்திமா மேரி சில்வியா முன்னிலை வகித்தனர். முனைவர் A.D. பத்மஸ்ரீ. வரலாற்றுத்துரை உதவிப்பேராசிரியர் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக S. கோகுல் கிருஷ்ணன், நேரு யுவ கேந்திரா, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தேனி K.வைரமுத்து B.Sc., M.PEd., M.Phil (PETP), மேல்நிலைப்பள்ளி, ஜெய்மங்கலம் U. திருநாவுக்கரசு, ரோட்டரி கிளப் தலைவர் மற்றும் யோகா உதவிப்பேராசிரியர், துரைமுருகன் NYV குத்துச்சண்டை, மாவட்ட இணைச் செயலர் மற்றும் நவீன்குமார், B.Sc., B.PEd தேனி மாவட்ட குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்துத்துறை மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டியை நடத்தினர்,
100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் C. நல்லாக்காள், இளங்கலை மூன்றாமாண்டு வரலாற்றுத்துறை மாணவி முதல் பரிசையும். K. பவித்ரா, இளங்கலை மூன்றாமாண்டு வணிகவியல் மற்றும் பயன்பாட்டியல்துறை மாணவி இரண்டாம் பரிசையும், V. சுகன்யா முதலாமாண்டு தமிழ்த்துறை மாணவி மூன்றாம் பரிசையும் பெற்றனர், கயிறு இழுத்தல் போட்டியில் ஜான்சி ராணி அணி மாணவிகள் முதல் பரிசையும், மணிமேகலை அணி மாணவிகள் இரண்டாம் பரிசையும் பெற்றனர், இறுதியாக, போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,
இந்த நிகழ்ச்சியின் நிறைவாக, M. சுதந்திரா தேவி, வணிகவியல் மற்றும் கணினிப்பயன்பாட்டியல்துறை உதவிப்பேராசிரியர் நன்றி நவில விளையாட்டுப்போட்டி இனிதே நிறைவுற்றது.