தேனி அருகே தர்மாபுரியில் இந்திய ராணுவ துறையில் சேவை ஆற்றி பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இராணுவ வீரர்களுக்கு தேனி வைகை ஜவான் நிறுவனம் மற்றும் தர்மாபுரி முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் இணைந்து ராணுவ கிராமம் என்று அழைக்கப்படும் தர்மாபுரியில் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் தலைவர் செல்வராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில் பணி நிறைவு பெற்ற 5 இராணுவ வீரர்களுக்கு தேனி வைகை ஜவான் மற்றும் தர்மாபுரி முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் மற்றும் கோட்டூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம மக்களிடையே நன் மதிப்பை பெற்ற சிறந்ததொரு தொண்டு நிறுவனமான கோட்டூர் ஹீரோ ஸ்டார் பொது நல அமைப்பு சார்பில் ஹீரோ ஸ்டார் ராஜதுரை,விரிவுரையாளர் வேல்முருகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து,மாலை அணிவித்து,
பொன்னாடை போர்த்தி,நினைவு பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தனர்.