கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருவையாறு பகுதிகளில் அச்சு வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்தி பாதிப்பு

தமிழக அரசு தரும் பொங்கல் தொகுப்பில் அச்சுவெல்லத்தை சேர்க்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை……
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவையாறு தாலுக்கா பெரம்பூர்,ஓலை தேவராயன்பேட்டை, செம்மங்குடி, வீரமாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக அச்சு வெல்லம் மற்றும் சக்கரை தயாரிப்பில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் , மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிகளில் வாங்கி உள்ள கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்யக் கோரியும் , தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் அச்சுவெல்லத்தை சேர்த்து வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.