திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் இயேசு பிறப்பை தத்ரூபமாக நடித்துக் காட்டிய குழந்தைகள்.
திருவாரூர் டிசம்பர் 23 டிசம்பர் 25 ஆம் நாள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடப்படும் விழா கிறிஸ்மஸ் விழாவாகவும். இந்த கிறிஸ்துமஸ் விழா 25ஆம் தேதி நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருவார்கள்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பள்ளியில் மாணவ மாணவிகள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமனிந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படுவது வழக்கம்
அந்த வகையில் வரும் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கிறிஸ்மஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மாணவிகள் ஏஞ்சல் ஆடை அணிந்தும் மாணவர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமனிந்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பை தத்ரூபமாக நாடகமாக நடித்து கொண்டாடினர்
மேலும் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது மேலும் அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்மஸ் தாத்தா இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்