தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு . பெரம்பூரில் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழா.
செங்குன்றம் செய்தியாளர்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெரம்பூர் பட்டேல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் புண்ணியமூர்த்தி. மாநில இணை செயலாளர்கள் சுப்பிரமணியம் ,விஜயன் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக சின்னத்திரை நடிகர் கருப்பு காமராஜ் , மருத்துவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் நுகர்வோர் எந்தெந்த முறைகளில் ஏமாற்றப்படுகிறார்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் மேலும் அதனை களைவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது . மேலும் நுகர்வோர் பாதிக்கப்பட்டால் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி எவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவது என்பது குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.