செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் பஜாஜ் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக 31 வது பொதுக்குழு கூட்டமும் ,ஆண்டு விழாவும் நடைபெற்றது .
இந்த நிகழ்வில் வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் கொளத்தூர் எஸ் எம் பி செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
சங்கத்தின் தலைவர் நடராஜன் செயலாளர் தனசேகர் பொருளாளர் ஞானசேகர் மற்றும் சங்க ஆலோசகர் பொன் டேவிட் சாமுவேல் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
இதில் முன்னதாக மயிலாட்டம் மற்றும் நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்யவும் வணிகர்களுக்கு அரசு சார்பில் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர் . தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். வியாபாரிகளின் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் படித்த சாதனைகள் புரிந்த மாணவ மாணவிகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான வணிகர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இறுதியில் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. மாதவரம் சுற்று வட்டாரங்களை சேர்ந்த அனைத்து வியாபாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.