பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் 300, மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு அழுகும் அபாயம்
பாதிக்கப்பட்ட விவசாயி மூர்த்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு……. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி விவசாயி யான இவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் தோட்டத்தில் 40 வருடங்களாக முன்னோருக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது பி ஏ பி வாய்க்கால் அவரது தோட்டத்தின் அருகாமையில் செல்கிறது மேலும் அந்த பிஏபி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பின் காரணமாக வாய்க்காலில் செல்லும் நீரானது அவரது தோட்டத்துக்குள் சென்று மூன்று அடிக்கு மேல் நீரானது தேங்கியுள்ளது
இதன் காரணமாக தற்போது 40 வருடத் தென்னை மரங்கள் அழுகி வருகிறது இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி மூர்த்தியின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது
இது குறித்து விவசாயி மூர்த்தி கூறுகையில் பிஏபி வாய்க்காலில் இருந்து வெளியேறும் நீரால் தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் வேரோடு அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் நேரில் வந்து பார்த்துவிட்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுநீதி நாளான இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து 300, மேற்பட்ட தென்னை மரங்களை சூழ்ந்துள்ள நீரை அகற்றி கொடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.