R. கல்யாண முருகன்.செய்தியாளர்
விருத்தாச்சலம்
விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உபகரணங்களை வழங்கிய, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதி வசிக்கும் ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, எக்ஸாம் பேட், பேனா,பென்சில், வாட்டர் பாட்டில், மற்றும் பள்ளிக்கு இரண்டு இரும்பிலான பீரோ என 60 ஆயிரம் மதிப்பில், கல்வி உபகரணங்களை கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் வழங்கினார். அப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.