தென்காசி
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல இடங்களில் கொட்டப்பட்ட கேரள மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்பட்டு அதிக துர்நாற்றமும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சமூக அலுவலர்கள் நேரடியாக தலையிட்டு எடுக்கப்பட்ட தீர்ப்பின்படி பசுமை தீர்ப்பாயம் கேரள மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட அறிவுரையின்படி தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை உடனடியாக ஆய்வு செய்து மீண்டும் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது
இந்நிலையில் கேரள அரசிலிருந்து வந்த சுகாதாரத்துறை ஆய்வு செய்து இக்கழிவுகளை உடனடியாக 18 வாகனங்களில் ஏற்றி மீண்டும் தமிழ்நாடு எளிமையான செங்கோட்டை வழியாக புளியரை அடுத்த கோட்டை வாசல் வழியாக கேரளாவிற்கு எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது இந்நிலையில் தென்காசி மற்றும் செங்கோட்டை தாசில்தார் செங்கோட்டை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் பாதுகாப்புடன் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
வாகனங்கள் அணிவகுத்து சென்றன இதனால் காசிமேசியாபுரம் குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் கழிவுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரினால் துர்நாற்றம் வீசியவாறு வாகனங்கள் சென்றன
எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் தமிழக வரலாற்றிலேயே கேரளாவில் இருந்து கொட்டப்படும் அனைத்து கழிவுகளும் இங்கேயே தங்கிவிடும் நிலையில் முதன் முறையாக பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் மூலம் கொட்டப்பட்ட கழிவுகள் மீண்டும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டது முதன் முறையென பொதுமக்கள் சந்தோஷ கோஷங்களை எழுப்பினர்