கோவையில் ரோட்டரி கிளப் ஆப் சவுத் சார்பாக மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது..
அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ஓட்டல் வளாகத்தில் போட்டி நடைபெற்றது.
போட்டிகளை சவுத் ஷட்டில் தலைவர் வெங்கடேஷ், துணை தலைவர் கல்யாண் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ரோட்டரி கிளப் சவுத் தலைவர் பாலசுப்ரமணியன்,செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
போட்டிகளை ரோட்டரி 3201 மாவட்ட துணை ஆளுநர்கள் சென் ராமநாதன்,
கல்யாண குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்..
ஜி.ஜி.ஆர்.தீபானா முன்னிலை வகித்தார்..
சவுத் ஷட்டில் அல்ட்ரா கோப்பைக்கான போட்டியாக நடைபெற்ற இதில் கோவை,திருப்பூர்,உடுமலை,
பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விளையாடினர்..
ஐம்பது வயதுக்கு உட்பட்ட மற்றும் அதற்கு மேல் என இருபிரிவுகளில் ஒற்றையர்,மற்றும் இரட்டையர்,கலப்பு பிரிவு என போட்டிகள் நடைபெற்றது..
இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் சஞ்சய் மற்றும் கவுரி முதலிடத்தையும்,ஷாருக்,மோதிகா ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்..
இதே போல ஆண்கள் இரட்டையர் ஐம்பது வயதுக்கு உட்பட்ட பிரிவில் சின்னசாமி,சஞ்சய் முதலிடத்தையும்,மணி,மதன் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
ஐம்பது வயதுக்கு மேல் பிரிவில் குமாரவேல் நந்தகுமார் ஆகியோர் முதலிடத்தையும்,செல்வம் பாலு ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்..
போட்டிகளில் வெற்றி பெற்ற வீர்ர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்..
இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக லட்சுமி செராமிக்ஸ் முத்துராமன்,தினகரன் அன் கோ உரிமையாளர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்…