மதுரையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. விதவிதமான நட்சத்திரம், குடில் அலங்காரம் மற்றும் மின் விளக்குகளால் தேவாலயங்கள் ஜொலிக்கின்றன.
இயேசு கிறிஸ்து அவதரித்ததற்கான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நாளை (25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி மதுரையில் உள்ள வீடுகளில் கிறிஸ்துமஸ்
குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள், அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு விழா களைகட்டி வருகிறது.
25ம் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. புத்தாண்டு வரை ஒவ் வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் ‘ஸ்டார்கள்’ அலங்கார மின்விளக்குகள் தொங்க விடப் பட்டுள்ளன.ஏழை எளியோர் களுக்கு நலதிட்ட உதவிகளும் நேற்று முதலே வழங்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாட நேற்று முதலே தென் மாவட்டங்களுக்கு ரயில் மற்றும் பஸ்களில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு வர தொடங்கி உள்ளனர். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மதுரையை சேர்ந்த ஜீவி, அம்மு கேரலின் கூறுகையில், “இயேசு பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் விதவித மான நட்சத்திரங் களை தொங்க விட்டிருப்பதை பார்ப்பதற்கு மனதை கவரும் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டு சிறப்பு பிராத்தனை செய்து, ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறுவது மிக பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது”
என்றார்.