திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக அறிவியல் மன்றம் நடைபெற்றது,
இந்நிகழ்விற்கு, பள்ளி தலைமை ஆசிரியை சுதா தலைமை தாங்கினார்,சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற, வரலாற்று முதுகலை ஆசிரியர் பார்த்திபன், கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார், மேலும் மாணவர்களுக்கு ஆபிரகாம் லிங்கனின், வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும், சமூக அறிவியல் பாடத்தின், முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார்,
தொன்மை சார்ந்த நாணயங்கள், விளையாட்டுப் பொருட்கள், வரலாற்று காட்சி படங்கள், போன்றவற்றை கண்காட்சி வைக்கப்பட்டு மாணவிகள் கண்டு களித்து பாடத்தின் தன்மையே அறிந்து கொண்டனர்,நிகழ்ச்சியில் நாடகம் பாடல் பரதம் வினாடி வினா மாறுவேட போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இறுதியாக மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன, ஆசிரியர் மேரி பிளாரன்ஸ்,நன்றி உரையாற்றினார், இந்நிகழ்வின் போது
உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெகன் ஜெயமூர்த்தி ரவிச்சந்திரன், கஸ்தூரி, மற்றும் ஆசிரியர்கள் உஷா, சரஸ்வதி, ராஜசேகர், கனிமொழி, ஆகியோர் உடன் இருந்தனர்…
போளூர் நிருபர்,
ப.பிரகாஷ்