எ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூரில் வன்னியர்களுக்கு10.5. இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
பெரம்பலூர். டிச.25. உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு
1000 நாட்கள் கடந்தும் வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து வன்னியர்சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம்
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலைஅருகே பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்பில் .பாமக மாவட்ட தலைவர் மதுரா.செல்வராஜ்.வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜ். மாவட்ட பொருளாளர் அம்சவள்ளி.அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அமைப்பு தலைவர் வழங்கறிஞர் தங்துரை.மாவட்ட அமைப்புத் தலைவர் மருதவேல்.மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் .சிறப்பு அழைப்பாளராக .மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி மற்றும்
மாநில செயற்குழு உறுப்பினர்கள் அனுக்கூர்
இராஜேந்திரன். உலக. சாமிதுரை. அன்புசெல்வன். கண்ணபிரான்.ராஜதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.இறுதியில் நகர செயலாளர் இமயவரம்பன் நன்றி கூறினார் .