திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார் (ஆர்சி) மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும், பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள், திருச்சி காவிரி ஆற்றில் அய்யாளம்மன் படித்துறையில், விடுமுறை கொண்டாட்டமாக தேர்வை முடித்துவிட்டு குளிக்க சென்றுள்ளனர்.
இதில் ஜாகிர் உசேன், விக்னேஷ், சிம்பு ஆகிய மூன்று மாணவர்கள் காவிரி ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.