100வது பிறந்தநாள் காணும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு! நேரில் சென்று கனிமொழி கருணாநிதி எம்.பி வாழ்த்து!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தகைசால் தமிழர் இரா.நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளான சென்னை நந்தனத்தில் உள்ள அவரின் இல்லத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று, நல்லகண்ணு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து, பழ.அதியமான் எழுதிய “வைக்கம் போராட்டம்” புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.