மர்ம நபர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பனை மரத்துக்கு புதுச்சேரி சமூக அமைப்பு தன்னார்வளர்கள் பூமாலை & மலர் தூவி அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.
புதுக்குப்பம் கிராமத்தில் சில மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்ப்பட்ட சுமார் 30 பனை மரங்கள் முழுமையாக எரிந்து விட்டன இதனை கண்டித்து புதுச்சேரி அனைத்து சமூக அமைப்பு ஒன்றினைந்து நண்பர்களும் ஒன்று கூடி நமது தமிழரின் பாரம்பரிய பண்பாடு கலாச்சாரம் நிறைந்த வாழ்வியல் மரத்தை தீட்ட சமூக விரோதிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து தீயிட்டு எரிக்கப்பட்ட பனை மரத்தின் கீழ் நின்று பூமாலை தூவி அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது
இனிவரும் காலங்களில் புதுச்சேரியில் இயற்கையை அழிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக போலீஸ் தலையிட்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பனை மரத்தை பாதுகாக்க சுமார் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பாடுபட்டு
பல லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ள பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்ளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து பனை மரத்தை காப்போம் என்று உறுதி மொழி எடுக்கப்படது இதற்க்கான ஏற்பாடுகளை பூரணாங்குப்பம் தனசுந்தரம்பாள் சாரி டெபுள் சொசைட்டி தன்னார்வலர் செய்திருந்தார்கள் நிகழ்ச்சியில் சுமார் 25 சமூக அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.