தினேஷ்குமார் க செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
அடிப்படை மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் தர்பகராஜிடம் புகார் மனு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் முறைப்படி Diploma in Community Medicines and Essential Drugs Provider என்ற கல்வித் தகுதியின் அடிப்படையில் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பிரைமரி கேர் அளவில் செய்து கொண்டு இருந்துள்ளார்.
இவர் 2003 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு DCMS&ED கல்வித் தகுதி உள்ளவர்கள் ஆங்கில மருத்துவம் பிரைமரி கேர் அளவில் பொதுமக்களுக்கு வழங்கலாம் என்று தெளிவுபடுத்துகிறது இதன் அடிப்படையிலேயே இவர் கிளினிக் வைத்து நடத்திக் கொண்டு இருந்தாக கூறப்படுகிறது.
இந்த தீர்ப்பினை மதிக்காமல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளினிக் கிற்கு ஆய்வு நடத்தி அப்துல்லா என்பவரை போலி மருத்துவர் என்று சித்தரித்து அவர் மீது வழக்கு தொடர்ந்து திருப்பத்தூர் கிளை சிறையில் அடைத்து உள்ளனர்.
எனவே இது அடிப்படை மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிரானது.
இனி வரும் காலங்களில் இதுப்போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டி உத்தரவிடும் படி இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜிடம் நடுத்தர சுகாதார பயிற்சியாளர்களின் அமைப்பினர் 20க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்துள்ளனர்.