தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வட புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் எம்பி முன்னதாக அரசு அலுவலகங்கள் முன்பாக பசுமையை போற்றும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்எல்ஏ கே எஸ் சரவணகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி உதவி பொறியாளர் அஜய் வட புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வி அன்னபிரகாஷ் ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்பட அரசு அதிகாரிகள் ஊராட்சி மன்ற அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்