காரைக்கால் மாவட்டம் சார்பாக கொண்டாடப்பட்ட நல்லாட்சி வாரத்தின் ஒரு பகுதியாக காரைக்கால் தாலுக்கா அலுவலகத்தின் சார்பில் 20.12.2024 அன்று காரைக்கால் கோவில்பத்து வடக்குத் தெரு, நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான “நரிக்குறவர் சாதி சான்றிதழ்” வழங்குவதற்கு தேவையான விண்ணப்பங்களை அவர்களின் இருப்பிடத்திற்க்கே சென்று காரைக்கால் வட்டாட்சியர் திரு செல்லமுத்து அவர்களின் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் அடங்கிய குழு மூலம் 19 விண்ணப்பங்கள் அவர்களின் இருப்பிடத்திற்க்கே சென்று பெறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அன்று பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்களை புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. PRN திருமுருகன் அவர்கள் அனைத்து நரிக்குறவர் பழங்குடியினரின் அவர்களின் வீட்டிற்கு சென்று வழங்கினார் மேலும்
முதல் முறையாக அந்த பகுதி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்களில் இருந்து உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்திற்கும், மற்றும் அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பயன் பெரும் வகையிலும் மிகவும் பயன் உள்ளதாக அமையும்.
இந்நிகழ்வில் காரைக்கால் தாசில்தார் திரு. செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் திரு. கமலஹாசன், கிராம நிர்வாக ஆய்வாளர் திருமதி. சுகன்யா மற்றும் காரைக்கால் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.