எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூர் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது: 15 லட்சம் மதிப்பிலான 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ள மாவட்டங்களில் கடந்த சில வருடங்களாக இருசக்கர வாகனத்தில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அத்தியூரை சேர்ந்த முகமது இப்ராஹிம்(22), ஆடுதுறை கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(26), கீழக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ரகுமான்(28), சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(25), ஆகிய நான்கு பேரையும், மங்களமேடு சரக டிஎஸ்பி தனசேகரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான தனிப்படை போலி சார் கைது செய்து, அவர்களிடமிருந்து 15 லட்ச ரூபாய் மதிப்பிலான 18 டூவீலர்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது.,
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில், தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும் வகையில், வந்த மேற்கண்ட நான்கு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 15 லட்ச ரூபாய் மதிப்பிலான 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
குற்றவாளிகளிடமிருந்து
கைப்பற்றப்பட்ட வாகனங்களில் 9 வாகனங்கள் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தது என்பதும், மீதமுள்ள 9 வாகனங்கள் அரியலூர், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திருடப்பட்டது என தெரிய வந்திருக்கிறது.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட உள்ளனர்.
மேலும் இந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து குற்ற வழக்குகளிலும் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
போதைப் பொருட்கள், லாட்டரி மதுபான விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து எவ்வித அச்சமும் இன்றி எனது செல்போன் என்னை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.
அவ்வாறு தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படுவதோடு, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.