மத்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாநில அரசிற்கு நிதி என கூறுவது மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கு என கும்பகோணத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றச்சாட்டு…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பட்ட அணி சார்பில் தஞ்சை மாவட்ட அளவிலான ஒற்றை மற்றும் இரட்டை இறகு பந்து போட்டி தஞ்சை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார் தலைமையில் ஏ.ஆர்.ஆர் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் , எம்பி கல்யாண சுந்தரம், முன்னாள் எம்பி ராமலிங்கம், எம்எல்ஏ அன்பழகன், மாநகர துணை மேயர் தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்டு இறகுப்பந்து போட்டியினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

இப்போட்டியில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 10 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்….
அப்போது அவர் கூறியதாவது மத்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாநில அரசருக்கு நிதி எனக் கூறுவது மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கு எனவும், மேலும் மத்திய பாஜக அரசு மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், ஏஆர்ஆர் பள்ளியின் தாளாளர் வைத்தியநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *