காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75 வது வைர விழா வினையொட்டி நடைபெற்ற மாநிலளவிலான 5 கீமீ மாரத்தான் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சென்னையினை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி துவங்கி 75 ஆம் ஆண்டு வைர விழாவை ஒட்டி நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் இன்று மாநிலளவிலான போதை பொருட்கள் இல்லா தமிழகம் எனும் வாசகத்தை முன்னிறுத்தி ஐந்து கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . சண்முகம் அவர்கள் துவக்கி வைத்தார்.

இருப்பால் பிரிவினர்கள் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் மாரத்தான் போட்டி காந்தி சாலை திருக்கச்சி நம்பி தெரு பெருமாள் கோயில் , சி என் அண்ணாதுரை தெரு டோல்கேட் என தொடர்ந்து பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.

ஆண்கள் பிரிவில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி டான் பாஸ்கோ கல்லூரியை சேர்ந்த அருண் என்பவர் முதலிடத்தினையும், சென்னை சென்ஜோசப் கல்லூரியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் இரண்டாம் இடத்திலும், காஞ்சிபுரம் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த சுரேஷ் மூன்றாம் இடத்தை பிடித்தார்..

இதேபோல் பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் பச்சையப்பன் பெண்கள் கல்லூரியை சேர்ந்த சந்தியா முதலிடத்தையும், அதே கல்லூரியை சேர்ந்த பிரியா இரண்டாம் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டம் , கிரிஸ்ட் கலை கல்லூரியை சேர்ந்த சௌமியா மூன்றாம் இடத்தை பெற்றார். முதல் பரிசு 5,075 இரண்டாம் பரிசு 3,075 மூன்றாம் பரிசு2,075 மேலும் நான்கு முதல் பத்து இடங்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தல 575 ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுத் தொகையினை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் முருகக்கூத்தன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் செந்தில் தங்கராஜ், காஞ்சிபுரம் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு, காஞ்சிபுரம் மாவட்டம் டிஎஸ்பி சரண்யா தேவி, கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *