தென்காசி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்துதலின் பேரில் சங்கரன் கோவில் தபால் நிலையம் முன்பு,மீன் துள்ளி, பனவடலிசத்திரம் ஆகிய இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தொகுதி தலைவர்கள் சாந்தகுமார், தங்கராஜ், தொகுதி செயலாளர் பீர்ரகுமான், பொருளாளர் மகேந்திரன், இணைச்செயலாளர் பேச்சி முத்து, செய்தி தொடர்பாளர் ராஜேஷ், தென்காசி பாதுகாப்பு படை அணியை சேர்ந்த சஞ்சய், சதீஷ், நிர்வாகிகள் கோபி பாண்டியன், எபனேசர், சிவக்குமார், ராஜு, வள்ளி ராஜ், வீரபாண்டியன், அருண்குமார், ரகுமான், பொன்ராஜ், பாலாஜி, பிரசித், கலையரசன், அருண்குமார், மகேஷ், பெருமாள் சாமி, சூரிய பேரரசன், வசீகரன், இளையராஜா, நவீன், பிரசன்னா, மகாராஜா, ஹரி, ஜெகன், மோகன், கதிர், அஜய், முத்துப்பாண்டி உள்ளிட்ட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை, மகளிர் பாசறை, இளைஞர் பாசறையைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்..