தே.பண்டரிநாதன்
(எ) அண்ணாதுரை
டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணம் வழங்க மறுக்கும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய். சரவணன் குமாரை கண்டித்து புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நலத்துறை அலுவலகத்தை இழுத்து பூட்டு போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் SC/ST மக்களுக்கு பொங்கல் மற்றும் தீபாவளிக்கு இலவச – வேட்டி சேலைக்கு பதிலாக பண வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை கைவிட்டு மீண்டும் இலவச வேட்டி – சேலை திட்டத்தை கொண்டு வரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய். சரவணன் குமார், மற்றும் இயக்குனர் இளங்கோவனை கண்டித்தும்,SC/ST மக்களுக்கு இலவச மானைபட்டா உடனடியாக பட்டா வழங்கிட வலியுறுத்தி புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை இழுத்து பூட்டு போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில அமைப்பாளர் தேவ.பொழிலன் தலைமையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என கலந்து கொண்டு அமைச்சர் சாய். சரவணன் குமார் மற்றும் துறை இயக்குனர் இளங்கோவனை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து விசிக மாநில அமைப்பாளர் கூறும்போது…
இலவச வேட்டி சேலைக்கு பதிலாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பணம் வழங்கப்பட்டு வருகிறது, இந்த திட்டத்தை கைவிட்டு மீண்டும் இலவச வேட்டி சாலை வழங்கினால் பெரும் ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டினர்.