R. கல்யாண முருகன்
விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளித்தார் .
அந்த மனுக்களை தொண்டர்கள் துண்டு பிரசுரங்களாக சென்னையில் வழங்கியதால் தொண்டர்களை கூட்டம் கூட்டியதாகவும் பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும் கூறி பொதுச் செயலாளர் புஷ்கி ஆனந்தை கைது செய்தனர். கைதை கண்டித்து விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் விருத்தாசலம் பாலக்கரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.