உலக மாற்றுத்தினாளிகள் தினம்

மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வே சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி

  தூத்துக்குடி, மில்லர்புரம் விகாசா மேல்நிலைப் பள்ளியில்   தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் தூத்துக்குடி மாவட்ட காது கேளாதர் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றன. இதில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில தலைவர்M.மருதப்பெருமாள் அனைவரையும் வரவேற்றார்கள் அதனைத் தொடர்ந்து முனைவர் மா.சங்கர் அவர்களின் சகா கலை குழுவின் கலை  நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்செல்வன் தனபால் அந்தோணி பாரத் இவர்கள் அனைவரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் 20பேருக்கு தலா ரூ.2000 வீதம் 40ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து
அரசு வழக்கறிஞர் மோகன் தான் சாமுவேல் சிறப்புரையாற்றி லயன்ஸ் கிளப் ஆப் தூத்துக்குடி கிங்ஸ் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் (வீல்சேர், ஊன்றுகோல்) வழங்கினார்கள். அதனை தொடர்ந்து பிளட் ஜெயபால் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ராஜா . இளைஞர் அணி ஜஸ்டின் . சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் மகேஸ்வரன். இருதய நண்பர்கள் இயக்கம் .பிரின்ஸ், தங்கையா. சீலன் மாஸ்டர் ஸ்டீபன். நாகேஸ்வரி. M.C அனைவரும் சிறப்புரை ஆற்றினார்கள்
மேயர் ஜெகன் பெரியசாமி .மற்றும் சரவணா ஹோட்டல் உரிமையாளர் செந்தில். கண்ணன். 700 மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய விருந்து செய்துள்ளார்கள் இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டு உபயோகப் பொருள் நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் P.கீதா ஜீவன் ..மில்லர்புரம் விகாசா மேல்நிலைப் பள்ளியின் சேர்மன் வேல் சங்கர். விவேகம் டிராவல்ஸ் உரிமையாளர் விவேகம் G.ரமேஷ். செய்திருந்தார்கள் 3வது மைல் கோல்டன் & நண்பர்கள், இதயம் சிமெண்ட் ஒர்க்ஸ், டுவிபுரம் ஜேக்கப். 500 மாற்றுத்திறனாளிகளுக்கு காபி, டீ, பிஸ்கட் பாக்கெட், ஆகியவற்றை வழங்கியவர்கள் மற்றும் வக்கீல் N. T. முருகன் . மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 மினி தண்ணீர் கேன் வழங்கினார்கள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜ், மாநில பொருளாளர் செல்வகுமரன், தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நல வாழ்வு சங்க தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சின்னத்துரை துணைத்தலைவர் கமல் தனசேகர், உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *