கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் கும்பகோணத்தில் உள்ள பேக்கரி கடைகளில் கேக் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பேக்கரி கடைகளில் பல்வேறு வகையான கேக் வகைகள் பல வண்ணங்களில் தயாராகி வருகிறது. அதனை பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதற்கு அலைமோதி கொண்டு வாங்கி செல்கின்றனர்.
அப்போது கடையின் உரிமையாளர்கள் கூறும்போது தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்கு தாங்கள் பல்வேறு வகையான பல வண்ணங்களில் கேக் தயாரித்து விற்பனை செய்வதாகவும் மேலும் முட்டை ,ஆயில்விலை உயர்ந்த போதும் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக
தாங்கள் கேட்கின் விலையை உயர்த்தாமல் பழைய விலைக்கே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம் என்று தெரிவித்தார்.