பிரபு தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420
தாராபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் 15, நாட்களுக்குப் பிறகு உயிரிழப்புi
சாவில் மர்மம் உள்ளதா? ஆர்டிஓ விசாரணை!..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குள்ளகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வொ.கயிலிநாதன், இவரது மனைவி கே. கௌரி மனோகரி, வயது 24. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தாராபுரம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது குழந்தை பிறந்தது. அந்த குழந்தை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இந்த நிலையில் ஒரு வாரம் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்து அதன் பிறகு தாயும் குழந்தையும் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
பிறகு குழந்தை பிறந்து 15, நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கௌரி மனோகரி,க்கு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கௌரி மனோகரியை அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். அதன் பிறகு மருத்துவர்களிடம் வொ.கயிலிநாதனின் மனைவி கௌரி மனோகரி இறப்புக்கு காரணம் என்ன என மருத்துவரிடம் கேட்டனர். ஆனால் அதற்கு முறையாக மருத்துவர்கள் பதில் அளிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 5- ஆண்டுகள் ஆன நிலையில் போலீசார் இந்த சம்பவத்தை வழக்காக எடுத்துக் கொள்ளவில்லை அதற்கு வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்துவார்கள் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ்ராஜா இரவில் வந்து கௌரி மனோகரியின் கணவர் வொ.கயிலிநாதனிடம். விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் நாளை காலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அதில் வரும் முடிவுகளை வைத்து என்ன காரணத்தினால் கௌரி மனோகரி இறந்தார் என்ற தகவல் கிடைக்கும் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து கௌரி மனோகரியின் கணவர் வொ.கயிலிநாதனின் தெரிவிக்கையில்:-
தனது மனைவிக்கு பிரஷர் மற்றும் சுகர் போன்ற எந்த ஒரு வியாதியும் இல்லை மேலும் எந்தவித நோய் தொற்றும் அவருக்கு இல்லை அவர் நன்றாக ஆரோக்கியமாக குழந்தை பிறந்தவுடன் இருந்தார் ஆனால் அறுவை சிகிச்சை செய்த பகுதியில் இடுப்பு வலி ஏற்பட்டது அதன் பிறகுதான் கௌரி மனோகரி உயிரிழந்துள்ளார். இதில் இயற்கையாக மரணம் ஏற்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளது. மேலும் பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறு ஏற்பட்டுள்ளதா? என்பது தெரியவரும் என தெரிவித்தார்.