தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி இல்லத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்த தின விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கு கழக மகளிர் அணி துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி எம் ராஜலட்சுமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகையா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரமேஷ், செல்வராஜ், தேவராஜ், ராமதுரை, பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், நகரச் செயலாளர் ஆறுமுகம், பேரூர் செயலாளர் சுதாகர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பரமகுநாதன், தீக்கணல் லெட்சுமணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் தங்கவேல், துணை தலைவர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் கவுன்சிலர் கனகராஜ், மாவட்ட அம்மா பேரவை தலைவர் செந்தில் குமார், இணை செயலாளர் வழக்கறிஞர் ராமேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணி தலைமை கழக பேச்சாளர் ராமசுப்பிரமணியன் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் அந்தோனி டேனியல், துணை செயலாளர் யாசின் மாலிக், பொருளாளர் செளந்தர் என்ற ஷாகுல் ஹமீது, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஆர் சி மாரியப்பன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் மகாராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் சரவணகுமார், துணை செயலாளர்கள் முருகன், சுடலை, கனகராஜ், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் நிர்மலா தேவி, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் நவநீதகிருஷ்ணன்,
கிளை செயலாளர்கள், நகர இளைஞரணி இணை செயலாளர் உமா மகேஸ்வரன், கிளை செயலாளர் பாபு கதிரேசன், சாமிதுரை, நகர தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் செல்லத்துரை, கழக நிர்வாகிகள் சுரேஷ், சண்முகசுந்தரம், செல்வராஜ், முத்துப்பாண்டி, கனகராஜ், பசுவதி, மாரிக்கனி, அன்னராஜ், இன்னாசிமுத்து, லூர்து, அருண்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *