கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இறகு பந்து போட்டி…
மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் துவக்கி வைத்தார்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவினை தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் தெற்கு ஒன்றிய மாணவரணி சார்பில் ஆடவர்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி சூலமங்கலம் சாலையில் எம். எஸ். உள்விளையாட்டு அரங்கத்தில் இதற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், அய்யம்பேட்டை பேரூர் கழக செயலாளர் துளசி அய்யா, அய்யம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் புனிதவதிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி போட்டியை துவக்கி வைத்தனர்.
இப்போட்டியில் தஞ்சை மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவரணி நிர்வாகிகள் வினோத்குமார், வீரா, துணைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, கருணாகரன், மாவட்ட பிரதிநிதி பிரபு, மணிமாறன், மற்றும் கழக ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் , விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.