கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் school of martial art trust சார்பாக தென்னிந்திய அளவிலான கராத்தே மற்றும் குங்ஃபூ போட்டிகள் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள TTD திருமண மண்டபத்தில் ஜனவரி 5 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஆரம்பமானது, இந்த மாபெரும் தற்காப்பு கலை போட்டி kyoshi shihabudeen kk8th Dan black belt அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் Rensui rose diogene l
5th Dan black belt அவர்களின் மேற்பார்வையில் சிறப்புடன் நடைபெற்றது.
தமிழ்நாடு,ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கராத்தே,குங்பூ போட்டிகள் தனித்தனி பிரிவாக நடைபெற்றது

சிறப்பு விருந்தினர்களாக திரு.அம்ரிஷ், திரு.ராமநாதன், திரு.முனியப்பா, திரு.மகேஷ், திரு.வெங்கடேஷ், திரு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. இந்த போட்டியை காண மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

ஜி.பி.மார்க்ஸ்
ஓசூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *