உரியடித்தல் இளவட்டக்கல் தூக்குதல் கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்ற குழந்தைகள்…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வன ஆலயத்தில் தாய் அறக்கட்டளை சார்பில் வேளாண் குடி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பழங்கால பொருட்களை வருங்கால சங்கதியினருக்கு காட்சிப்படுத்தும் வகையிலும் தை மாதத்தை வரவேற்கும் வகையிலும் பன்னிரண்டாம் ஆண்டு தைமகளே வருக பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது பெண்கள் கும்மியடித்து பொங்கல் படைத்து கால்நடைகளை வணங்கி விழா தொடங்கியது

இந்நிகழ்ச்சியில் கால்நடைகள் கண்காட்சியும் பழங்காலத்தில் தமிழர்களின் வாழ்வியலை வருங்கால சங்கதியினருக்கு காட்சிப்படுத்தும் வகையில் ஓலைச்சுவடிகள் வீட்டு உபயோகப் பொருட்கள் இசைக்கருவிகள் அடங்கிய பொருட்காட்சியும் நடைபெற்றது இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கண்டு ரசித்தனர்

இதன் தொடர்ச்சியாக 48 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் புத்தகங்கள் மொழிபெயர்ப்பு நூல்கள் அடங்கிய திருவள்ளுவர் அரங்கமும் திறக்கப்பட்டது மேலும் நிகழ்வில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ப பங்கேற்கும் வகையில் உறியடிப்போட்டி இளவட்டக்கல் தூக்குதல் கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளும் நடைபெற்றது

போட்டிகளில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர் வேளாண்குடி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கிலும் தை மாதத்தை வரவேற்கும் வகையிலும் பரோடா வருடம் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் விழா குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *