மதுரை, ஆயுதப்படை மைதானத்தில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் நடை பெற்றது.
மதுரை மாவட்ட மூத்தோர் தடகள கழகம் சார்பில் 42வது மாநில மூத்தோர் தடகள போட்டி கள் மதுரையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் 30 வயதிற்கு மேல் 90 வயது வரையிலான இருபாலரும் பங்கேற்றனர். முக்கியமாக காவல், வருமான வரி, ரயில்வே துறைகள் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியில் உள்ளோர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றியின் அடிப்படையில் தகுதி பெறும் 50 நபர்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பெங்களூரூவில் நடைபெறும் தேசி யப்போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர். தமிழக வீரர்கள் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து பெற்று வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.