பிரபு தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420
மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பாராட்டு
தாராபுரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மணிப்பூர் ஹை கோர்ட்டு தலைமை நீதிபதி கிருஷ்ண குமாருக்கு பாராட்டு விழா தாராபுரத்தில் நடைபெற்றது வக்கீல் செல்வராஜ் வரவேற்றார் தாராபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கலைச் செழியன் தலைமை வகித்தார்.
அகில இந்திய பார் கவுன்சிலிங் முன்னாள் துணைத் தலைவர் கார்வேந்தன் ஓய்வு பெற்ற சென்னை ஜகோர்ட் நீதிபதிகள் பாரதிதாசன் கல்யாணசுந்தரம் தற்போதைய சென்னை ஜகோர்ட் நீதிபதிகள் அருள்முருகன், வடமாலை,ராமகிருஷ்ணன், பாலாஜி, குமரேஷ் பாபு, தண்டபாணி, கார்த்திகேயன், சுந்தர் ஆகியோர் பேசினார்கள்.
நீதிபதி தந்தை தெய்வசிகாமணி மற்றும் மறைந்த தாராபுரம் வழக்கறிஞர் படங்களை திறக்கப்பட்டது.
தாராபுரம் வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த 50 ஆண்டுகளாக வக்கீலாக பணிபுரிந்த நான்கு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டி கௌரவித்தனர். முடிவில் தாராபுரம் வழக்கறிஞர் சங்க செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.