கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் மூன்று ராஜாக்கள் திருநாளை முன்னிட்டு பிரமாண்டமான பெரிய பானையில் கிராமத்து சமத்துவ பொங்கல் விழா….
இந்து ,கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் பங்கேற்பு…..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பெரும்பாண்டி மாதா கோவில் தெருவில் புனித பெரியநாயகி மாதா ஆலயத்தில் மூன்று இராஜாக்கள் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை கிராம நாட்டாண்மையும் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவருமான குடந்தை அரசன் தலைமையிலும், இறை பராமரிப்பு மரியன்னை ஆலய பங்கு தந்தை அருட்திரு.பெர்னாண்டஸ், தூய மரியன்னை பேராலய பங்கு தந்தை அருட்திரு,கோஸ்மான் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.ஊர் செயலாளர் ஸ்டீபன் வரவேற்றார்.ஊர் கணக்கர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
விழாவில் குடந்தை மறை மாவட்ட ஆயர் மேதகு.ஜீவானந்தம்,ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்டம் தவத்திரு.திருவடிக்குடில் சுவாமிகள்,அல்-மதினா பள்ளிவாசல் இமாம் மவ்லவி அபுதாகிர் பைசி பாகவி,தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பாஸ்டர் ஜான்சன் சாமுவேல்,கும்பகோணம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இராம.ராமநாதன்,குடந்தை மாமன்ற உறுப்பினர் சக்கரை,நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் கொய்யா கோவிந்தன்,இஸ்லாமிய மக்கள் ஜனநாயக உரிமை இயக்க செயலாளர் அய்யம்பதி ராசா நசீர்,விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய ஆனந்த்,தலைமை நிலைய செயலாளர் சூரை.திருமேனி,மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் தலையாரி,மயிலேஸ்வர ராஜா, இரா.மணிகண்டன்,இளந்தமிழ்ப்புலிகள் பாசறை மாவட்ட செயலாளர் கோ.ஐயப்பன்,ஊர் பொறுப்பாளர்கள் சகாய ஹென்றிதாஸ், கிறிஸ்துராஜா,டேவிட், செய்தி தொடர்பாளர் சௌரிராஜ்,கோவில் பிள்ளை ஆரோக்கியதாஸ்,முன்னாள் நாட்டாண்மை அடைக்கலம்,மரியாயின் சேனை முன்னாள் தலைவர் ஜோஸ்பின் மேரி உள்ளிட்ட பல சமயத்தவரும் கலந்துகொண்டனர்