தி. உதயசூரியன், டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு, வாடிப்பட்டி தாலுகா செய்தியாளர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுக்கடையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பொன்யாழினி பாலாஜி, கிழக்கு ஒன்றிய செயளாலர் பிச்சைமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூர் செயலாளர் ராஜா தொடங்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமை கண்டித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகப்புடன்ரூ.ஆயிரம் வழங்க கோரியும், போதை மற்றும் கஞ்சா புழக்கத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட துணை செயளாலர் முத்துகுமார் நன்றி கூறினார்.