ராமநாதபுரத்தில் ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் தமிழ்தாயையும் தமிழ்நாட்டையும் தொடர்ந்து வஞ்சித்து மத்திய பாஜகவின் கைகூலியாக இருக்கிற ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் மறைமுகமாக ஆதரவு தருகிற அதிமுகவின் நடவடிக்கையும் கண்டித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான .உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் ஆணைப்படி மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் மகளீர்அணியினர் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டுசிறப்பித்தனர்