கரூர் செய்தியாளர்- மரியான் பாபு
கரூர் மாவட்டம் தபால் நிலையம் முன்பு திமுக சார்பில் .
கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.;
அதனைத் தொடர்ந்து கரூரில் திமுக சார்பில்
மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் கவர்னர்கள், பாஜக அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். கவர்னர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு. கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் மாநில உரிமைகளை சிதைத்து, மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் தொடர்ந்து.
2025 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது .அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எம். ரவி கலந்து கொண்டுள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து.சட்டமன்ற பேரவையிலிருந்து சென்றபோனதால் பரபரப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் தமிழக கவர்னர்ஆர் என் ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தின் மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வக்கீல் மணிராஜ், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில், மாநகர மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர்கள் மாநகர செயலாளர் எஸ் பி கனகராஜ், அன்பரசு, கோல்டு ஸ்பாட் ராஜா, புகலூர் நகராட்சி சேர்மன் குணசேகரன், மாவட்ட ஒன்றிய, நகர , கட்சி நிர்வாகிகள் பலர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷம் எழுப்பினர்.