செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் நல சங்கம் நாள்காட்டி வெளியீட்டு விழா
எஸ்.ஆர்.இன்ஜினியரிங் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் நல சங்க நாள்காட்டி வெளியிட்டு விழாவில் சென்னை தமிழகத்திலிருந்து ஏராளமான வெல்டிங் உரிமையாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சங்க கொடி ஏற்றினர். அதனைத் தொடர்ந்து வெல்டிங் உரிமையாளர்கள் நல சங்கத்தின் உள்ள உறுப்பினர்களுக்கு தமிழக அரசு
நல உதவி வழங்க முன்வர வேண்டும் வெல்டிங் தொழிலாளர்கள் நலன் கருதி உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்,
வெல்டிங் தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்களின் நலன் கருதி அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் கே.குணசேகரன் மாநில பொதுச் செயலாளர் ஆர்.காசி மாநில பொருளாளர் எ.சர்புதீன் மாநில கவுரவ தலைவர் ஜி.ஞானசுந்தரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.கருணாகரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி.கோபால் என்.மாரிமுத்து ஆர்.காளிதாஸ் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பரல் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் நல சங்க நாள்காட்டி வழங்கப்பட்டது.