எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மயிலாடுதுறை மாவட்ட சங்கம் சார்பில் மீன் விற்பனையாளர்களுக்கு தனி கூட்டுறவு சங்கம் அமைத்து அடையாள அட்டை வழங்க கோரியும் மனு அளிக்கும் போராட்டம்.
மீன்பிடி மற்றும் விற்பனை தொழிலில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களையும் மீனவ கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டை வழங்கிட கோரியும், அரசு நிவாரணத்தை முழுமையாக வழங்கிட கோரியும், மீன் விற்பனையாளர்களுக்கு தனி கூட்டுறவு சங்கம் அமைத்து அடையாள அட்டை வழங்க கோரியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரியும் மனு கொடுக்கும் போராட்டம் மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வள்ளல், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் அந்தோணி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர்கள் ஞானபிரகாசம், கேசவன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்டவர்கள பங்கேற்றனர்.