கேலோ இந்தியா மகளிர் லீக் தேசிய அளவிலான யோகா போட்டி
கோவை யோவா யோகா அகாடமி மாணவிகள் பதக்கங்கள் பெற்று அசத்தல்
டில்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா மகளிர் லீக் போட்டியில் யோகா விளையாட்டில் பதக்கம் பெற்று கோவை திரும்பிய யோவா யோகா அகாடமி மாணவிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது…
கேலோ இந்தியா மகளிர் தேசிய விளையாட்டு போட்டிகள் அண்மையில் தலைநகர் டில்லியில் நடைபெற்றது..
இதில் யோகா பிரிவில் இந்தியாவின் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம்,ஆந்திரா,கர்நாடாகா,கேரளா,இராஜஸ்தான், உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்…
மகளிர்க்காக நடைபெற்ற பிரத்யேக போட்டியில் தமிழக அணி சார்பாக கோவையில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் யோவா யோகா அகாடமியின் தலைமை பயிற்சியாளர் வைஷ்ணவி ஆர்ட்டிஸ்டிக் குரூப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும்,யோவா யோகா அகாடமியில் பயிற்சி பெற்று வரும் சக்தி சஞ்சனா மற்றும் தக்ஷயாஸ்ரீ ஆகிய இருவரும் ஆர்ட்டிஸ்டிக் ஜோடி பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர்…
இதே போல போட்டியில் கலந்து கொண்ட பவ்யா ஸ்ரீ,ராகவர்தினி,ஷிவானி,சக்தி சஞ்சனா,மற்றும் தக்ஷயா ஆகிய ஐந்து பேர் இணைந்து ஆர்ட்டிஸ்டிக் குழு போட்டியில் முதல் ஐந்து இடத்தில் இடம் பிடித்தனர்.
இந்நிலையில் கோவை திரும்பிய சாதனை பெண்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
இது குறித்து பதக்கம் பெற்ற மாணவிகள் கூறுகையில்,தற்போது யோகா போட்டிகளில் கேலோ இந்தியா அளவில் சாதனை புரிபவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றிகளை தெரிவிப்பதாக மாணவிகள் கூறினர்…
விமான நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் யோவா யோகா அகாடமி நிறுவனர் சரவணன் உட்பட மாணவிகளின் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்…