மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,632 காளைகள் 5347 மாடு பிடி வீரர்கள் தயார்…
ஆன்லைன் முன்பதிவு நிறைவு.
மதுரை, அவனியாபுரம், பால மேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,632 காளைகள், 5,347 மாடு பிடி வீரர்கள் பதிவுசெய்துள்ள நிலையில் முன்பதிவு நேற்று மாலையுடன் முடிந்தது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 14ல் அவனியாபுரம், ஜன. 15ல் பாலமேடு மற்றும் ஜன. 16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள் ளன. இதற்கான பந்தல்கால் நடப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந் துள்ளன.
இந்த 3 இடங்களிலும் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ப தற்கான காளைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் விபரங்களுடன், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு துவங்கி, நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது.
போட்டிகளின் போது காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உத வியாளர் அனுமதிக்கப் படுகின்றனர். பதிவு விபரங்கள் மீதான சரிபார்ப்பு ஆன்லைன் முறையில் முடிந்ததும், தகு தியான காளையர், காளைகள் ஜல்லிக் கட்டு போட்டியில் பங்கேற்கலாம். கடந்த 24 மணி நேரத்தில், இ-சேவை மையங்கள் மற்றும் கணினி முன்பதிவு மையங்களில் முன்பதிவு தீவிரமாக நடந்தது.
தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலேயே மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிர பலமானது என்பதால், இங்கு தங்களின் காளைகள் பங்கேற்று வெற்றி பெறவும், காளைகளை அடக்கவும் பலரும் ஆர்வம் காட்டுவர். இதனால், இந்த இடங்களுக்கு முன்பதிவு செய்வதில் தமிழ்நாடு முழுவ தும் இருந்து பலரும் ஆர்வம் காட்டினர். நேற்று மாலை 5 மணியுடன் முன்பதிவு முடிந்த நிலையில், 12,632 காளைகளுக் கும், 5,347 மாடுபிடி வீரர்களும் களம் காண முன்பதிவு செய்துள்ளனர்.
3 இடங்களுக்கும் காளைகளை முன்பதிவு செய்திருந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே ஒரு காளைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் அதி கப்படியான காளைகள் களம் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவனியாபுரம் – 2,026 காளைகள் 1,735 மாடு பிடி வீரர்கள், பாலமேடு – 4,820 காளைகள் 1,914 மாடு பிடி வீரர்கள் அலங்காநல்லூர் – 5,786 காளைகள் 1,698 மாடு பிடி வீரர்கள்