திருச்சி
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம்
தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8/1/2025 அன்று தா.பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமில் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குதல், மருத்துவச் சான்றிதழ், இலவச ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு, உதவி தொகைக்கான பதிவுகள் நடைபெற்றது.
மேலும் இம் முகாமிற்கு குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர், எலும்பு மூட்டு மருத்துவர், காது தொண்டை மற்றும் கண் மருத்துவர்கள் ஆகியோர்களின் ஆலோசனைகள் நடைபெற்றது.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கான பதிவு போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும் உடல் இயக்க குறைபாடு, அறிவுசார் குறைபாடு, பார்வைத்திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு போன்றவற்றிற்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் 178 குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ஆனந்தராஜ், டேவிட் வில் பிரட், சண்முகசுந்தரம் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் காஞ்சனா ஆகியோர் தலைமை வகிக்க தா.பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீராம் மற்றும் ரமா ஆகியோரின் முன்னிலை நடைபெற்ற
இம்முகாமை வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நடேசன், சரவணன், புஷ்பலதா, சுகுணா ஆகியோர் வழி நடத்தினர்.மேலும் சிறப்பு ஆசிரியர்கள் கனகவல்லி, தமிழ் கொடி, சித்ரா மற்றும் இயன் முறை மருத்துவர் டேவிட் ஆகியோர் சிறப்பாக முகாமிற்கு தேவையான முன் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.