காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட படப்பை பஜார் பகுதியில் வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பை குறைக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 5 ஆண்டுகள் கடந்தும் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது.
இதனைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் படப்பை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது
அதிமுகவின் மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான அதிமுகவினர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ பழனி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்