தனது வெல்டிங் பட்டறையில் திமிங்கலத்தின் வாந்தியை விற்பனைக்கு வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திமிங்கலத்தின் வாந்தியை வைத்திருந்த ராஜேந்திரன் என்பவரை கையும் களவுமாக பிடித்து வனத்துறையினர் கைது செய்துள்ளனர் அவர்களிடம் இருந்த6.5 கிலோ திமிங்கல வாந்தி பறிமுதல் செய்த வனத்துறையினர் இந்தப் பொருள் அவர்களுக்கு கிடைத்தது எப்படி? யாரிடமிருந்து அதனை பெற்றார் என்பது குறித்து தொடர் விசாரணையில் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திமிங்கில வாந்தி என்றால் என்ன?
திமிங்கல வாந்தி அல்லது ஆங்கிலத்தில் நம்பர் கிரிஸ் என அறிவிக்கப்படும் பொருளானது என்னை திமிங்கலம் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒருவகை திடக்கழிவு பொருளாகும் இது வெள்ளை சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும் திமிங்கலம் பிளீக் கனவாய் போன்றவற்றை உண்ணும் போது அதன் ஓடுதல் செரிமானம் ஆகாது என்பதால் அதற்காக திரவம் ஒன்று உருவாகி அதனை வாந்தியாக திமிங்கலம் எடுத்து விடும்
இது கடலின் மேல் மிதந்தபடி சூரிய ஒளி மற்றும் உப்பு நீரால் வேதியியல் மாற்றம் அடைந்து கரையை வந்தடையும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் அட்டவணை 1 ல் உள்ள திமிங்கிலத்தின் அம்பர் கீரிசை விற்பது சட்டப்படி குற்றமாகும் அதன் அடிப்படையில் ராஜேந்திரன் என்பவரை பிடித்து வனத்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் கோடிகளில் வர்த்தக மாவதால் பலர் இதுபோல் சட்ட விரோத விற்பனையில் ஈடுபடுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *