காளை மாட்டு வண்டி,ஓலை குடிசை என கிராமமாக மாறிய பள்ளி வளாகம்- கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழா, தமிழக கிராமங்களில் நடக்கும் திருவிழாவை கண்முன் நிறுத்தியது…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது.

பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை புதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் மற்றும் கவுரி தேவேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,பள்ளியின் நிர்வாகி உதயேந்திரன்,
செயலர் ரவிக்குமார்,வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா,ஆஸ்ரம் பள்ளி முதல்வர் சரண்யா உட்பட ஆசிரிய,ஆசிரியைகள் கலந்து கொண்டனர்..

பாரம்பரிய திருவிழாவாக நடைபெற்ற இந்த விழாவில் , கிராமங்களில் கொண்டாடப்படும் விழாக்களை போல மாட்டு வண்டிகள், கரும்பு தோரணம் கட்டி, வண்ண கோலமிட்டு பள்ளி வளாகமே ஒரு சிறிய கிராமமாக காட்சியளித்தது..

இதில் தமிழர் பாரம்பரிய உடைகளான பட்டு தாவணி அணிந்த மாணவிகள், பொங்கல் வைத்து குலவையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ராட்டினம்,ஊஞ்சல்கள்,காளை மாடு,போன்ற தத்ரூப திருவிழா போன்று நடைபெற்ற இதில் மாணவ,மாணவிகள் விளையாடு மகிழ்ந்தனர்…

இதனைத்தொடர்ந்து மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் முழங்க மாணவ, மாணவிகள் கரகாட்டம், பரதநாட்டியம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தமிழர் பாரம்பரிய வீரத்தை போற்றும் வகையில் சிலம்பாட்டம், மான் கொம்பு, வாள் வீச்சு போன்ற சாகசங்களை மாணவ, மாணவிகள் செய்து காண்பித்து அசத்தினர்.

குறிப்பாக பழங்காலத்தை நினைவு படுத்தும் விதமாக, பாக்குவெட்டி, குத்துகால், அஞ்சறைப்பெட்டி, உரல், செப்பு பாத்திரங்கள், படி உழக்குகள், மரக்கால்,உள்ளிட்ட பழங்கால கிராமிய பயன்பாட்டு பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.

கிராமத்தில் நடக்கும் திருவிழாவை கண்முன் நிறுத்திய இந்த பொங்கல் விழாவில், பெற்றோர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டு நடனமாடியது அங்கிருந்தவர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *