தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கைலாசநாதர் மலைக்கோயிலில் மார்கழி மாதம் சனி மகா பிரதோஷம் ” வழிபாடு நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் மூலிகைகள், மற்றும் பால் , தயிர், சந்தனம் விபூதி கொண்டு அபிஷேகம் செய்து உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.
ஆங்கில வருடத்தின் முதல் பிரதோஷம் என்பதால் அதிக பக்தர்கள் குவிந்தனர் பல மாவட்டத்தில் இருந்து வருகை தந்தனர் வருகை தந்த பக்தர்களுக்கு கட்டளைதாரர்கள் சார்பாக பிரசாதம் வழங்கபட்டது . .இந்த மலைக்கோயிலில் பெளர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணங்கள், அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது என்பது நம்பிக்கை இந்த மலையில் சித்தர்கள் ரிஷிகள் , முனிவர்கள் சூட்சுமம் ஆக வந்து செல்கின்றனர்
என்று சான்றோர்கள் கூறி வருகிறார்கள். இந்த புனிதமான இடத்தில் கைலாசநாதர் தியான நிலையில் இருப்பதால் மன அமைதிக்கும் சிறந்த புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் தரிசனம் செய்ய அதிகமாக பக்தர்கள் வருகின்றார்கள் ஏற்பாடுகளை
அன்பர் பணி செய்யும் பராமரிப்புகுழு தலைவர் வி.ப ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.