பிரபு தாராபுரம் செய்தியாளர்.
செல்:9715328420

தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா: மாணவிகள் உற்சாக நடனமாடி கொண்டாடினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மகாராணி தனியார் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் மாணவிகள் கோதுமை அரிசி போன்ற நவதானியங்கள் மற்றும் வண்ண வண்ண பூக்களாலும் அரிசி மாவில் கோலமிட்டும் மாணவிகள் அசத்தினர்.
பின்னர் விழாவில் கல்லூரி மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து அனைவரும் ஒற்றுமையாக புத்தம் புதிய மண்பானையில் பொங்கல் வைத்து கரும்புகள் கொண்டு வழிபாடு செய்தனர்.
பின்னர் வளாகத்தில் அனைத்து மாணவிகளும் ஒன்று சேர்ந்து கும்மியாட்டம் மற்றும் தமிழ் திரைப்பட பல்வேறு பாடல்களுக்கு இசைக்கு ஏற்ப நடனம் ஆடினர்.
ரேக்ளா மாட்டு வண்டி கட்டி அதனை ஓடவிட்டு மாணவிகள் ரசித்தனர்
தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.