செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் தபால்பெட்டி அருகே உள்ள சி.எஸ்.ஐ .சென்னை பேரராயம் அருள் ஆலயத்தில் தமிழர் திருநாள் சிறப்பு தமிழிசை வழிபாடு நடைபெற்றது.
இதில் குருசேகரம் அசோக் நகர் வெற்றி சிலுவை ஆலயத்தின் அருட்பணி தந்தையும், சென்னை பேராயர் எ . பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலய திருப்பலியை துவக்கி வைத்து பேருரை ஆற்றினார்.
நிகழ்வின் முதலாவதாக இறை பக்திப் பாடல்கள் குழுவினரால் பாடப்பட்டு வந்திருந்த அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினர்.
அதன் பின்னர் புதுப்பானையில் பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டு பொங்கலோ, பொங்கல் என அனைவரும் கோஷமிட்டு மகிழ்வுடன் தமிழர் திருநாளை ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு கொண்டாடினார்.
பின்னர் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, சிலம்பப் போட்டி, ஆகிய போட்டிகள் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேராயர் நினைவு பரிசை வழங்கினார். இந்நிகழ்வில் அருட்பணி இமானுவேல் ஈஸ்டர்ராஜன் , மற்றும் சார்லஸ் சாந்தகுமார் ,ஏசுதாஸ் , டேவிட் சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டு பொங்கல் தைத்திருநாளை வரவேற்கும் விதமாக வாழ்த்து பேசினர்.
இறுதியில் அனைவருக்கும் கரும்பு, இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.