மதுரையில் புகையில்லா போகியை கொண்டாடவும், மாசற்ற வைகையை உருவாக்கவும். வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை கீழ அண்ணா தோப்பு மற்றும் சலவையர் காலனி, வைகை கரை சாலை பேச்சியம்மன் படித்துறை பகுதிகளில் நடைபெற்றது..
இதில் பாலீத்தீன் மனிதன் வேஷமிட்ட நபர் பொதுமக்களிடம் பாலீத்தீன் குப்பைகளை கொட்டாதீர் ,எரிக்காதீர், வைகை ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்…
இதில் சமூக ஆர்வலர் இல.அமுதன் தலைமையில் நடைபெற்றது.. இதில் சேதுபதி பள்ளி ஆசிரியர் முரளிதரன், திருநாவுக்கரசு, பழனிவேல் ராஜன், மணிகண்டன், கார்மேகம் ஹரிகரன்
வைகை நதி இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகை ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.